×

சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு: கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட  அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு  பொதுமாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகப்பட்ச வெப்ப நிலை 32 டிகிரி குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியல் ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த மாவட்டங்களின் விவரம்;

தாமரைப்பக்கம் திருவள்ளூர் 10, பந்தலூர் நீலகிரி 9, தேவலா நீலகரி, பாலவிடுதி கரூர் தலா 8, சின்னக்கல்லார் கோவை, அதனக்கோட்டை புதுக்கோட்டை தலா 7, அய்யனவராம் சென்னை, பொன்னேரி திருவள்ளூர், அரக்கோணம்  ராணிப்பேட்டை, துவக்குடி திருச்சி, வால்பாறை கோவை தலா 6, சோழவரம் திருவள்ளூர், பெரம்பூர் சென்னை, பஞ்சப்பட்டி கரூர், பெருங்கலூர் புதுக்கோட்டை, சின்கோனா கோவை தலா 5 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 05 வரை மன்னார்வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 05 வரை அந்தமான், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 01 முதல் 02 வரை தென்தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 01 முதல் 02 வரை கடலோர கேரளா, கர்நாடகா லட்சதீவு, மாலத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 03 முதல் 05 வரை தென்தெற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 03 முதல் 05 வரை கடலோர கேரளா, கர்நாடகா லட்சதீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 04 முதல் 05 வரை அந்தமான், தெற்கு , வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 04 முதல் 05 வரை தெற்கு குஜராத், மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

Tags : districts ,parts ,Chennai ,Weather Center ,Coimbatore ,announcement , Chance of moderate rain in a few parts of Chennai: Chance of heavy rain in 7 districts including Coimbatore ... Weather Center announcement
× RELATED தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 19...