×

100 லிட்டர் பாலை கீழே கொட்டி விவசாயிகள் போராட்டம்: கொள்முதல் திடீர் நிறுத்தம்

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வீ.கூட்ரோடு அருகே தனியாருக்கு சொந்தமான பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த விவ
சாயிகள் பாலை ஊற்றி வந்தனர். பாலுக்கு உண்டான பணமும் ஒரு மாதத்தில் மூன்று முறை வழங்கியதாகவும் தெரிகிறது. இதனால் இந்த பண்ணைக்கு ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் லிட்டர் பால் வரத்து இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் சில தனிப்பட்ட பிரச்னையின் காரணமாக பால் பண்ணை நிர்வாகம் நேற்று பால் கொள்முதல் செய்யவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்களின் பல லட்சம் லிட்டர் பால் வீணானது.

இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டு சின்னசேலம் அருகே செம்பாகுறிச்சி கைகாட்டி பகுதியில் சுமார் 100 லிட்டர் பாலை கீழே ஊற்றி போராட்டம் செய்தனர். இதையடுத்து அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சாமிநாதன் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய உங்கள் கோரிக்கையை அரசிடம் சொல்கிறோம் என்று கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
அதைப்போல சின்னசேலம் அருகே கனியாமூர் சுற்று வட்டார விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பால் கொள்முதல் செய்யக்கோரி கனியாமூர் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : halt , Pouring milk down, farmers struggle
× RELATED ஒன்றிய அரசின் கலால் வரி குறைப்பால்...