பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை: தேர்தல் ஆணையம் முடிவு..!!

பாட்னா: பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பீகாரில் 243 பேர் கொண்ட சட்டசபை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற அக்டோபரில் நடைபெற உள்ளது.  இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன. நாடு முழுவதும் தற்போது பரவலாக கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, 65 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள், கொரோனா நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் ஆகியோரும் இனி எதிர்வரும் தேர்தல்களில் தபால் வாக்கு செலுத்த வசதியாக, தேர்தல் விதிமுறைகளில் உரிய மாற்றங்களை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீகார் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொரோனா நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள், கொரோனா நோயாளிகள் தபால் மூலம் ஓட்டு போட புதிய விதிகளை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்திற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்த தேர்தல் மற்றும் பிற இடைத்தேர்தல்களிலும், 65 வயதுக்கு மேற்பட்ட குடிமகன்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆனால், 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், அத்தியாவசிய சேவை பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொரோனா பாதித்து வீடு மற்றும் பிற அமைப்புகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: