டெல்லி, மும்பை மற்றும் பாரிஸ் இடையே ஜூலை 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் 28 ஏர் பிரான்ஸ் விமானங்களை இயக்க முடிவு..!!

டெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி வரும் நிலையில் வருகின்ற ஜூலை 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் 28 ஏர் பிரான்ஸ் விமானங்களை இயக்கவுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த விமானங்கள் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும்  பாரிஸ் இடையே இயக்கப்படுகிறது. மேலும் ஜூலை 17ம் தேதி முதல் முதல் 31ம் தேதி வரை அமெரிக்காவிற்கு 18 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் , இது ஒரு இடைக்கால சேவை என்றும் கூறினார்.

ஜெர்மனுக்கு விமானங்கள் இயக்குவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறினார். வெளிநாட்டு விமானம் சேவை தொடங்குவது குறித்து 3 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார். கொரோனா வைரஸ் தொற்றால் மார்ச் 23-ந்தேதியில் இருந்து விமான போக்குவரத்திற்கு இந்திய அரசு தடைவிதித்திருந்தது. மே மாதம் 25-ந்தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி உள்நாட்டு விமான சேவை நடைபெற்று வருகிறது. ஆனால் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31-ந்தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும், வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் இந்திய அரசு இந்தியாவுக்கு அழைத்து வருகிறது.

Related Stories: