கேரள மாநிலத்தை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு..!!

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கரை சஸ்பெண்ட் செய்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும்  இந்த வழக்கில் துறை ரீதியான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மலப்புரத்தைச் சேர்ந்த முகமது அன்வர், சையது ஆலவி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரக முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயன் மனைவி சௌமியா, ரமீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ விசாரணை ஒருபுறமிருக்க, தங்க கடத்தலில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து சுங்கத்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு அமீரக தூதரக துணை அதிகாரி ரஷீத் தீடிரென வெளியேறினார். தங்கக் கடத்தல் விசாரணை தீவிரமைடைந்துள்ள நிலையில் அவசரமாக யு.ஏ.இ. துணைத்தூதர் ரஷீத் வெளியேறியுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து 3 நாட்களுக்கு முன் டெல்லி சென்று அங்கிருந்து துபாய் சென்றுள்ளார். மேலும், சரித், ஸ்வப்னா ஆகியோரால் கடத்தி வரப்பட்ட சுமார் 40  கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை ஜலால் மற்றும் அவரது குழுவினர் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்திருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Related Stories: