கொரோனா பேரிடரால் திண்டாடும் தமிழக அரசு!: வரி வருவாய் 63% வீழ்ச்சி..மது வருவாய் மகிழ்ச்சி!!!

சென்னை: கொரோனா பேரிடர் காரணமாக தமிழக அரசின் வரி வருவாய் 63 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் தமிழக அரசுக்கு வரிவருவாய் 12 ஆயிரத்து 318 கோடி மட்டுமே இடைத்துள்ளதே இதற்கு காரணம். 2019 - 20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 25 ஆயிரத்து 082 கோடி ரூபாய் வரிவருவாய் கிடைத்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில்  நடப்பு காலாண்டில் 63 சதவீதம் வரிவருவாய் குறைந்துள்ளது. 2020 - 21ம் நிதி ஆண்டில் எதிர்பார்க்கப்படும் ஒட்டு மொத்த வரிவருவாய் 1 லட்சத்து 33 ஆயிரத்து 530 கோடியாகும்.

இதில் முதல் காலாண்டு வரிவருவாய் 33 ஆயிரத்து 888 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. கொரோனா பேரிடர் காரணமாக வரிவருவாய் குறைந்துள்ளது என்றாலும் ஏப்ரல், மே மாதங்களை விட ஜூன் மாதம் வரிவருவாய் சற்று கூடுதலாகவே உள்ளது. அவற்றில் மிக முக்கியமானது கலால் வாரியாகும். ஜூன் மாதம் மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு 724 கோடி ரூபாய் கலால் வாரியாக கிடைத்துள்ளது. 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 588 கோடி ரூபாய் மட்டுமே கலால் வரியாக கிடைத்தது.

வருகின்ற காலங்களில் பத்திரப்பதிவு மற்றும் மோட்டார் வாகனங்கள் தமிழக அரசுக்கு கூடுதலாக வரிவருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ஜி.எஸ்.டி வரி நிலுவையாக மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்தின் பங்காக 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கிடைத்திருப்பதும், தமிழக அரசின் நிதி திண்டாட்டத்தை ஓரளவு குறைத்துள்ளது.

Related Stories: