×

குச்சிபாளையம் மூவர் கொலை வழக்கில் அண்ணனுக்கு 3 ஆயுள், தம்பிக்கு 2 ஆயுள் தண்டனை!: விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!!!

விழுப்புரம்: செஞ்சி அருகே 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் அண்ணனுக்கு 3 ஆயுள் தண்டனையும், தம்பிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கி விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செஞ்சியை அடுத்த நாகலாம்பேட்டையை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த 2012ம் ஆண்டு தனது தம்பியுடன் இணைந்து நல்லான்பிள்ளைபெற்றான் கிராமத்தை சேர்ந்த சேகர் மற்றும் அவரது மகள் லாவண்யா, அவளுடைய காதலன் சிதம்பரனை கொடூரமாக எரித்து கொன்றனர். இது தொடர்பான தகவலை முருகனின் மகள் பார்கவி, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகன், அவரது மனைவி, தம்பி மதியரசு ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது முதல் குற்றவாளியான முருகனுக்கு 3 ஆயுள் தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும், குற்றத்தை  மறைத்ததற்காக 6 ஆண்டு சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும்  விதிக்கப்பட்டது. அதேபோன்று முருகனின் தம்பி மதியரசுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், குற்றத்தை  மறைத்ததற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். இதையடுத்து அண்ணன், தம்பி இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முருகனின் மனைவி விடுதலை செய்யப்பட்டார்.

Tags : brother ,uncle ,Kuchipalayam ,Villupuram Women's Court ,women ,Villupuram , Kuchipalayam, three murders, 2 life sentences, Villupuram Women's Court
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...