பேரழிவிற்கான வலை விரிக்கிறது கொரோனா: தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு தொற்று உறுதி, 69 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

* தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றினால் 46,714 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,07,416 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,106 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 69 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 2,236 ஆக உயர்ந்துள்ளது. இன்று அரசு மருத்துவமனைகளில் 44 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 25 பேரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 82,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று 1,712 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மொத்தம் 65,748 பேர் குணமடைந்துள்ளனர். 15,038 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 23 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் உயிரிழப்பு 1341 ஆக உள்ளது.

* தமிழகத்தில் மொத்தம் 107 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 54 அரசு மருத்துவமனைகளில், 53 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் இதுவரை 17,09,459 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 95,308 பேரும், பெண்கள் 61,038 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 23 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

* தமிழகத்தில் 12 வயதிற்குள் 7,782 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 1,29,430 பேரும், 60 வயதிற்கு மேல் 19,157 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: