அடுத்த மூன்றரை ஆண்டுகளில் ரயில்வே துறை 100% மின்மயம் ஆக்கப்படும்: ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

புதுடெல்லி: அடுத்த மூன்றரை ஆண்டுகளில் ரயில்வே துறை 100% மின்மயம் ஆக்கப்படும் என்று ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல்  தகவல் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்திய தொழில் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டு இன்று பேசும்பொழுது, ரயில்வே துறை அடுத்த 3.5 ஆண்டுகளில் 100% மின்மயம் ஆக்கப்படும்.

அடுத்த 9 முதல் 10 ஆண்டுகளில் 100% கார்பன் மாசு இல்லாத துறையாக மாற்றியமைக்கப்படும். இதனால், வரும் 2030ம் ஆண்டில், உலகின் முதல் மிகப்பெரிய தூய்மையான ரயில்வே துறையை நாம் கொண்டிருப்போம். ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்வினியோக அமைப்பு என்ற வாசகத்தினை பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார்.  சர்வதேச புதுப்பிக்கத்தக்க சமூகத்தில் இந்தியா முன்னணி வகித்து வருகிறது. சர்வதேச சூரிய மின்திட்டத்திற்கு மாறுவதற்காக நாம் அனைவரும் பணியாற்றி கொண்டிருக்கிறோம், என்று கூறியுள்ளார்.

Related Stories: