கொரோனாவில் இருந்து கடவுளால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும் : கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு கருத்து!!

பெங்களூரு : கொரோனாவில் இருந்து கர்நாடகாவை கடவுளால்தான் காக்க முடியுமென அந்த மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், உயிரிழப்பு 900ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பெங்களூருவில் ஏற்கனவே 22 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “இன்னும் இரு மாதங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும். நம்மை யார் காப்பாற்றுவது? கடவுள்தான் நம்மைக் காக்க வேண்டும் என்று பதிவிட்டார்.

மேலும் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஸ்ரீராமலு, உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆளும் கட்சி நபராக இருந்தாலும் சரி , எதிர்க்கட்சி நபராக இருந்தாலும் சரி , பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், இந்த வைரஸ் எந்த வித பாரபட்சத்தையும் காட்டாது. அடுத்த இரண்டு மாதங்களில் மட்டுமே கொரோனா பாதிப்புகள் உயரும் என நான் நம்புகிறேன். அரசின் அலட்சியத்தால் வைரஸ் பரவல் வேகமெடுக்கிறது என்று யாராவது கூறினால் அது முற்றிலும் தவறான தகவலாகும். கொரோனாவில் இருந்து கடவுளால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்” என்றார்.

Related Stories: