×

கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்ற ரஷியா : 20 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க முடிவு!!

மாஸ்கோ: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 17 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க ரஷியா முடிவு செய்துள்ளது. கொரோனாவுக்கான தடுப்பு ஊசியைக் கண்டுபிடித்து, மனிதர்களுக்கு செலுத்தி முதற்கட்டமாக வெற்றி கண்டுள்ளதாக, ரஷ்யாவின் செச்னோவ் பல்கலைக் கழகம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. கொரோனா தடுப்பூசிக்கான மருந்தை ரஷ்யாவில் உள்ள ‘காமேலி இன்ஸ்டியூட் ஆப் எபிடெமியோலஜி மற்றும் மைக்ரோ பயாலஜி’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த ஊசி மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனையும் செய்யப்பட்டுள்ளது. சோதனை முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைத்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தடுப்பு மருந்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளது. இந்த நிலையில் சுமார் 20 கோடி தடுப்பூசி மருந்தை தயாரிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் 3 கோடி தடுப்பூசி தயாரிக்க ரஷியா முடிவு செய்துள்ளது. அத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 17 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க ரஷியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனிடையே ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,பாதுகாப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம். தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுகிறது, ஆன்டிபாடிகள் உருவாக்கப்படுகின்றன. அது நம்மை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கின்றன.ஜூலை இறுதிக்குள் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்கிறோம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Russia , Corona, vaccine, hit, Russia
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...