×

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

மான்செஸ்டர்: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2வது டெஸ்ட், மான்செஸ்டர் ஒல்டு டிரபோர்டு மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. சவுத்தாம்ப்டனில் நடந்த டெஸ்ட் போட்டியில்  வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.  

ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. முதல் டெஸ்டில் கேப்ரியல், ஹோல்டர் ஆகியோரின் அபார பந்துவீச்சு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தது. 2வது இன்னிங்சில் பிளாக்வுட் குவித்த 95ரன், த்ரில் வெற்றியை வசப்படுத்த உதவியது. தொடக்க ஆட்டக்காரர் கிரெய்க் பிராத்வெய்ட், விக்கெட் கீப்பர் ஷேன் டவ்ரிச் உட்பட பலரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அணிக்கு பலம்.
இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வெற்றி அவசியம் என்பதால், அந்த அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முதல்முறையாக தலைமை பொறுப்பை ஏற்ற அவர் 2 இன்னிங்சிலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய பர்ன்ஸ், சிப்லி, கிராவ்லி ஆகியோரும், பந்து வீச்சாளர்கள் ஆண்டர்சன், ஆர்ச்சர் ஆகியோர் கை கொடுத்தால் வெற்றிக்கு முயற்சிக்கலாம். ஸ்டூவர்ட் பிராடுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விடுப்பில் சென்றுள்ள ஜோ ரூட் அணிக்கு திரும்புவது கூடுதல் பலமாக இருக்கும்.
இரு அணிகளுமே வெற்றிக்கு வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. நேரடி ஒளிபரப்பு: சோனி 6, சோனி டென் ஸ்போர்ட்ஸ்.

இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ஸ்டோக்ஸ், ஆண்டர்சன், ஆர்ச்சர், பெஸ், பிராடு, பர்ன்ஸ், பட்லர் (விக்கெட் கீப்பர்), கிராவ்லி, டென்லி, ஒல்லி போப், சிப்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட். வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், நிக்ரூமா போனர், கிரெய்க் பிராத்வெய்ட், ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்பெல், ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால்,ஷேன் டவ்ரிச் (விக்கெட் கீப்பர்), ஷனான் கேப்ரியல், கெமர் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், ரேமன் ரீபர், கெமர் ரோச்.

Tags : West Indies ,England ,2nd Test , England-West Indies, 2nd Test, today, start
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...