×

சில்லி பாயின்ட்...

* எந்த ஒரு அணியையும் சொற்பமான ஸ்கோரில் சுருட்டும் திறமை தற்போதைய இந்திய பந்துவீச்சாளர்களிடம் உள்ளது என்று இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் கிரீம் ஸ்வான் பாராட்டி உள்ளார்.
* கத்தார் நாட்டில் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் லீக் சுற்றின்போது, தினசரி 4 ஆட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* விளையாட்டுப் போட்டிகளை மீண்டும் தொடங்குவது குறித்து, நிலைமைக்கு ஏற்ப மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளோம் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரை கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
* பந்தை பளபளப்பாக்க எச்சிலை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வேகப் பந்துவீச்சாளர்களால் பந்தை ஸ்விங் செய்ய முடியுமா என்ற சந்தேகத்தை சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போக்கிவிட்டது என்று டியூக்ஸ் பந்து தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
* எனக்கும் குல்தீப்புக்கும் பிரச்னை ஏற்படும் போதெல்லாம் அவற்றை தீர்க்க டோனி சரியான ஆலோசனை வழங்கி ஊக்குவிப்பார் என்று சுழற்பந்துவீச்சாளர் சாஹல் கூறியுள்ளார்.
* பெங்களூருவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஜூலை 19ம் தேதி மீண்டும் தொடங்குவதாக இருந்த ஹாக்கி பயிற்சி முகாம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* ‘முதல் டெஸ்டின்போது நான் முதல் பந்தை எதிர்கொண்டதில் இருந்தே எனது கவனத்தை சிதற வைக்க இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பல முயற்சிகளை மேற்கொண்டார் என்று பிளேக்வுட் தெரிவித்துள்ளார். அவர் விளாசிய 95 ரன், வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Roulette, point
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு