×

79 சதவீதம் பேர் குணமடைந்தனர் முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் குறையும் கொரோனா: தினசரி தொற்று 2 ஆயிரத்திலிருந்து குறைந்தது

சென்னை: முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன்படி தினசரி பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்திலிருந்து ஆயிரமாக குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் தற்போது வரை 79,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்  62,552 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்படி சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 79 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனைத் தவிர்த்து 15 ஆயிரத்து 814 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்படி திருவொற்றியூரில் 608 பேர், மணலியில் 280 பேர், மாதவரத்தில் 438 பேர், தண்டையார்பேட்டையில் 1,006 பேர், ராயபுரத்தில் 1,214 பேர், திரு.வி.க.நகரில் 998 பேர், அம்பத்தூரில் 943 பேர், அண்ணா நகரில் 1,560 பேர், தேனாம்பேட்டையில் 1,497 பேர், கோடம்பாக்கத்தில் 2,199 பேர், வளசரவாக்கத்தில்  914 பேர், ஆலந்தூில் 508 பேர், அடையாற்றில் 1,164 பேர், பெருங்குடியில் 353 பேர், சோழிங்கநல்லூரில் 464 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மொத்தம் 1,295 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், திருவிகநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 100க்கு மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை கடந்த ஜூன் மாதம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஜூன் 19ம் தேதி ஜூலை 5ம் தேதி சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இதன் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.

அதன்படி கடந்த 10 நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் சென்னையில் தினசரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் கடந்த 10 நாட்களாக சென்னையில் தினசரி  ஆயிரம் முதல் 1500 பேருக்கு மட்டுமே கொரேனா கண்டறியப்பட்டுகிறது. இதன்படி ஜூன் 30 ம் முதல் ஜூன் 3ம் தேதி சென்னையில் தினசரி 2 ஆயிரம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. ஆனால் இந்த பாதிப்பு ஜூலை 4ம் தேதி 1800 ஆக குறைந்து. இதன்பிறகு படிப்பாயாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஜூலை 14ம் தேதி சென்னையில் 1078 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதைப்போன்று மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த ஜூன் மாதம் சென்னையில் தினசரி 30க்கு மேற்பட்டவர்கள் மரணம் அடைந்தனர். தற்போது தினசரி 20 பேர் மரணம் மட்டுமே மரணம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிவது, கை கழுவுவது உள்ளிட்ட விதிகளை தொடர்ந்து பின்பற்றினால் சென்னையில் கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தலாம் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Chennai ,Corona , 79 per cent, healed, full curfew, Chennai, declining corona
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...