×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு முதல்வர் எடப்பாடியை விசாரிக்க கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புதுடெல்லி: சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் கடந்த 3ம் தேதி புதிய மனு தாக்கல் செய்தார். அதில், “சாத்தான்குளத்தில் தந்தை, மகன் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கும் என மாநில அரசு தரப்பில் தெரிவித்தாலும், தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி சிபிசிஐடிவிசாரிக்கிறது. சிபிசிஐடி என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைவசம் இருக்கும் உள்துறையின் கீழ் வருவதால், அதனை அவரிடம் இருந்து திரும்பப்பெற வேண்டும்.

மேலும், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இறப்பு என்பது இயற்கை மரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதால், அவர் இந்த விவகாரத்தில் ஈடுப்பட்டுள்ள குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார் என்று தெளிவாக தெரியவந்துள்ளது. அதனால் தந்தை, மகன் கொலை வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்த வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது. தற்போது வழக்கு சி.பி.ஐ வசம் மாற்றப்பட்டுள்ளதால் முதல்வரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நேற்று உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Tags : Chief Minister ,Edappadi ,Supreme Court , Sathankulam, father, son, murder case, Chief Minister Edappadi, sought to be heard, Supreme Court, today, hearing
× RELATED அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக...