×

திருவள்ளூரில் காமராஜர் பிறந்தநாள் விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு மாவட்டம், மதுரவாயில் பகுதி காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட தலைவர் பூவை பீ.ஜேம்ஸ் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில் நிர்வாகிகள் பி.வி.தமிழ்ச்செல்வன், எம்.கே.வேலாயுதம், கே.வேல்ராஜ், பி.டி.ரோமியோ, கே.வி.திலகர், தேவதாஸ், கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி, செந்தில், ஆண்ட்ரூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூந்தமல்லி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாவட்டத் தலைவர் பூவை பீ.ஜேம்ஸ் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில் நகர தலைவர் இமயவர்மன், மாவட்ட நிர்வாகிகள் எட்வின் காமராஜ், தாயுமானவன், லட்சுமணன், ஞானசேகரன், ரமேஷ், கோபால், பழனி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புரட்சி பாரதம் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள சிலைக்கு கட்சித் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில நிர்வாகிகள் வக்கீல் கே.ம்.ஸ்ரீதர், கூடப்பாக்கம் எ.குட்டி, டி.கே.சி.வேணுகோபால், சி.பி.குமார், நகர தலைவர் புங்கத்தூர் டி.தேவா, செயலாளர் எம்.எழில்வண்ணன், ஒதிகை பி.தாமஸ், எறையூர் எஸ்.பார்த்திபன், சி.சரவணன், சுரேஷ், டார்ஜன், டி.பரணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டத்துறை செயலாளர் ஏ.அருள் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர்  ஆர்.மாணிக்கவாசகம், மாநில சட்டப்பிரிவு துணைத்தலைவர் வக்கீல் புழல் பி.குபேந்திரன், அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.நாராயணன்  ஆகியோர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். இதில் ஏ.பொன்ராஜ், ஜெ.ஹேமகுமார், வீரா, கே.ஆஞ்சநேயன், ஏ.பிரதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : birthday party ,Tiruvallur ,Kamaraj , In Tiruvallur, Kamaraj's birthday, festival
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...