ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை அழைத்து வர திமுக எம்.பி. தயாநிதி மாறன் கோரிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்..!!

சென்னை: ரஷ்யாவில் வோல்கா கிராட்நகரில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை அழைத்து வர திமுக எம்.பி. தயாநிதிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மாணவர்களை ரஷ்யாவில் இருந்து அழைத்து வரக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட தமிழக மாணவர்கள் வோல்கா கிராடில் சிக்கித் தவித்து வருவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் உள்ளிட்டவற்றை கற்பதற்காக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் சென்றுள்ளனர். அவர்களைப் பத்திரமாக நாட்டுக்கு அழைத்துவரக் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான சீட் கிடைக்காதவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கிறார்கள். சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படிப்பவர்களே அதிகமாகி உள்ளனர்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனையடுத்து தமிழர்களை மீட்டு வரும் வகையில் முயற்சி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் விமானங்கள் இயக்க தமிழக அரசு

தடை விதித்துள்ளதால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உணவு, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த இரண்டு மாதமாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் பரவியது. இந்த நிலையில் ஷ்யாவில் வோல்கா கிராட்நகரில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை அழைத்து வர வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: