முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு 99-வது பிறந்தநாள்: ஆங்கிலேயருக்கு எதிராக இளம் வயதியிலே போராடியர்!!!

சென்னை:  இந்திய விடுதலை போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான என். சங்கரய்யா இன்று தனது 99வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1922ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி கோவிப்பட்டியில் சங்கரய்யா பிறந்தார். மதுரையில் அமெரிக்கன் கல்லூரில் படித்துக்கொண்டிருந்தபோது, மாணவர் சங்க தலைவராக பொறுப்பேற்று ஆங்கிலேய அரசுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் மாணவர்களை சேர்க்க அணி திரட்டினார்.

பி.ஏ., இறுதி தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில், வெள்ளை அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக சங்கரய்யா கைது செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகே, அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறந்த பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட சங்கரய்யா இன்று 99வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்டார். தற்போது இந்த பிறந்தநாளிலும் கொரோனா பேரிடரிலிருந்து மக்களை காக்க முன்வர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை மட்டுமல்ல, 3 ஆண்டுகள் சங்கரய்யா தலைமறைவாகவும் வாழ்ந்துள்ளார். இந்தியாவில் 1948ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது, சலவை தொழிலாளி வீட்டில் பல மாதங்களாக இருந்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியில் மத்திய குழு உறுப்பினர், மாநில செயலாளர், மத்திய கட்டுப்பாட்டு குழு செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து தன்னுடைய உழைப்பால் அவற்றிற்கெல்லாம் பெருமை சேர்த்தவர். மேலும், 3 முறை சட்டபேரவைக்கு தேர்வு செய்யப்பட்டு உழைக்கும் மக்களின் குரலாக ஒலித்தவர். 1940ம் ஆண்டுகளில் கலை இலக்கிய வடிவங்கள் மூலம் மக்களை திரட்டியபோது சங்கரய்யாவும் பல நாடகங்களில் நடித்துள்ளார். பொதுவாழ்வில் நேர்மைக்கும், தூய்மைக்கும் சங்கரய்யா எடுத்துக்காட்டாக இன்றைக்கும் திகழ்பவர்.

Related Stories: