தி.மலையில் பிறந்த குழந்தைகள் உட்பட 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!!

திருவண்ணாமலை:  திருவண்ணாமலையில் மேலும் புதிதாக 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,347ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் கொரோனாவானது புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரிதளவில் அச்சமடைந்துள்ளனர்.

இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், அவர்கள் வசித்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றன. மாவட்ட அரசானது இதுபோன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டும், கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

பதிலாக, கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்தான் நாள்தோறும் பலியாகி வருகின்றனர். இதனால் திருவண்ணாமலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 24ஆக உள்ளது. மேலும், அரசு மருத்துவமனையில் 1352 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், புதிதாக பிறந்த குழந்தைகள் உட்பட 124 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகி உள்ளது. அதாவது, பிறந்த 15 நாட்களே ஆன நிலையில் ஒரு ஆண் குழந்தைக்கும் மற்றும் 8, 11 மாதங்களே ஆன 2 குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திருவண்ணாமலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,347 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: