7 மாவட்டங்களின் எண்ணெய் குழாய் அமைக்க கையகப்படுத்தும் நிலத்துக்கு 100% இழப்பீடு தரப்படும்: முதல்வர் பழனிசாமி உறுதி

கிருஷ்ணகிரி : எண்ணெய் குழாய் அமைக்க கையகப்படுத்தும் நிலத்துக்கு 100% இழப்பீடு தரப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூரில்  இருந்து பெங்களூரு தேவனகுந்தி வரை பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் ஐடிபிஎல் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் விவசாய விளை நிலங்களில் குழாய்களை பதிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த  அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தும் இருந்தனர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தியது. அந்த போராட்டத்தில் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சாலையோரமாக நிறைவேற்ற வலியுறுத்தியும் விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்தநிலையில் இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்குகிறது. மேலும் எண்ணெய் குழாய் அமைக்க கையகப்படுத்தும் நிலத்துக்கு 100% இழப்பீடு தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: