ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வழக்கு.: தடை விதிக்க முடியாது என ஐகோர்ட் திட்டவட்டம்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா மறைந்த நிலையில், அவர் வசித்து வந்த போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று, 2017-ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

அதனையடுத்து தமிழக அரசு போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக்குவதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியது. மேலும் தமிழக அரசு நினைவில்லமாக்க அவசர சட்டத்தையும் பிறப்பித்தது. இந்த நிலையில் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் தொடர்பான உயர்நீதிமன்ற கருத்தை தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எந்த அவசரமும் காட்டவில்லை. போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான அசையும் சொத்துக்களை கையகப்படுத்தவே அவசர சட்டம் பிறப்பித்தோம். நிலம் கையகப்படுத்தும் நடைமுறையில் இறுதி முடிவு எடுக்கவில்லை, என்றார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து குறிப்பிடத்தக்கது.

Related Stories: