×

கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக மாடர்னா பயோ தொழில்நுட்ப நிறுவனம் தகவல்..!!

வாஷிங்டன்: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை அழிக்க பல்வேறு நாடுகளுக்கும் தடுப்பூசியை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பயோ தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.

நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின் இதழில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளில், கொரோனா தடுப்பு மருந்து, சோர்வு, குளிர், தலைவலி போன்ற லேசான பக்கவிளைவுகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கு வேலை செய்துள்ளது. தேசிய சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மாடர்னா, மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்ட அமெரிக்காவின் முதல் தடுப்பு மருந்து என்ற பெயரை பெற்றுள்ளது.

முதல்கட்ட சோதனையில் 18 முதல் 55 வயது வரையிலான 45 நபர்களுக்கு, 28 நாட்கள் இடைவெளியில் M.R.N.A -1237 தடுப்பூசி இரண்டு முறை செலுத்தப்பட்டது. 25, 100 மற்றும் 250 மைக்ரோ கிராம் என டோஸ் அடிப்படையில் குழுவாக பிரிக்கப்பட்டனர். மார்ச் 16 முதல் ஏப்ரல் 14ம் தேதிக்குள் இடையில் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சோதனை தொடர்பாக பாதுகாப்பு கவலைகள் எதுவும் இல்லை என்றாலும் இரண்டு தடுப்பூசியை செலுத்திய பிறகு தன்னார்வலர்களுக்கு ஊசி போடும் இடத்தில் சில வலி போன்ற லேசான மற்றும் மிதமான பக்க விளைவுகள் இருந்தன. மேலும் தடுப்பூசியின் அளவு அதிகமாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இரண்டாவது தடுப்பூசிக்கு பின்னர் 100 மைக்ரோகிராம் டோஸ், 80% மத்தியில் சோர்வு; குளிர் 80%; தலைவலி 60%; மற்றும் தசை வலி 53% இருந்ததாகவும், மற்ற லேசான பக்கவிளைவுகள் இருந்ததாகவும் மாடர்னா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாடர்னா நிறுவனம், தனது எம்.ஆர்.என்.ஏ-1237 தடுப்பு மருந்தை, வரும் ஜூலை 27ம் தேதி மூன்றாவது கட்டமாக மிகப்பெரிய சோதனையை துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா முழுவதும் சுமார் 87 இடங்களில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பு மருந்தை செலுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் மூன்றாவது கட்ட சோதனையை துவங்கும் முதல் நிறுவனமாக மாடர்னா இருக்கும். பின்னர் தடுப்பூசி குறித்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்களின் கருத்தின் அடிப்படையில் இறுதிக்கட்ட பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

Tags : Bio Technology ,Moderna , Moderna’s Potential Coronavirus Vaccine Produces Positive Early Results
× RELATED கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு...