×

தமிழக அரசு கொரோனா நிவாரணப் பணிகளுக்கு ரூ.10,000 கோடி செலவிடப்பட்டுள்ளது : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கிருஷ்ணகிரி : தமிழக அரசு கொரோனா நிவாரணப் பணிகளுக்கு ரூ.10,000 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் அவர் அளித்த பேட்டியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, தமிழகத்திற்கு ரூ.672 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.அரசின் நிதி நிலைக்கேற்ப தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.சென்னை மாநகராட்சி பகுதியில் 600க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.நாள்தோறும் 70 லட்சம் பேருக்கு அம்மா உணவகத்தில் உணவு வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் உணவு தனியத்துக்காக மத்திய அரசு ரூ.6,394 கோடி வழங்கி உள்ளது.ஜன்தன் திட்டம், உணவு தானியம், கொண்டை கடலை வழங்க மத்திய அரசு நிதி அளித்துள்ளது.புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் வழங்க ரூ.215.9 கோடியை மத்திய அரசு வழங்கியது, என்றார்.


Tags : Palanisamy ,government ,Tamil Nadu , Krishnagiri, Corona, Impact, Chief Palanisamy
× RELATED தமிழ்நாட்டில் எப்போதும்...