×

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்பு: பாடத்திட்டங்கள் ஒளிபரப்பு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை...!!

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடத்திட்டங்கள் நடத்தப்படும் என்ற திட்டம் தொடங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ஓளிபரப்பு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பது மேலும் தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டன.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் மேற்போன்ற வகுப்புகள் நடத்த வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை அடுத்து, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டது. அதன்பின்பாக தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை வீடியோ முறையில் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் திட்டத்தினை நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். தற்போது அந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததன் தொடர்பாக இன்று முதல் எந்தெந்த பாடங்கள் எந்தெந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என்ற பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி கல்வி தொலைக்காட்சியில் காலை 6 மணி முதல் மாலை வரை எந்தெந்த வகுப்புகளுக்கான பாடங்கள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. காலை 6.00 மணிக்கு நீட், JEE போன்ற படிப்புகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாட்டனி பாடம் நடத்தப்படவுள்ளது. அதேபோல 7.00 - 8.00 மணி வரை இயற்பியல் பாடமும் நடத்தப்படும் என கூறப்பட்டிருக்கின்றது. 8.00 - 8:30 மணி வரை 10ம்  வகுப்பிற்கான தமிழ் பாடமும், 8:30 - 9.00 மணி வரை 10ம் வகுப்பு ஆங்கில பாடமும் நடத்தப்படவுள்ளது. இதுபோன்று ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களை கற்று கொள்வதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீட் மற்றும் JEE ஆகியவற்றிற்கு தயாராகும் மாணவர்களுக்காக மாலை 7.00 - 8.00 மணி வரை வேதியியல், 8.00 - 9.00 மணி வரை விலங்கியல் என்று வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் தனித்தனியாக அரை மணி நேரம் என்பது பள்ளி மாணவர்களுக்காகவும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு 1 மணி நேரமும் பட்டியலானது வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி கல்வி தொலைக்காட்சியில் தினந்தோறும் எந்தெந்த பாடங்கள் வெளியிடப்படும் என்ற பட்டியலை  வெளியிட்டிருக்கிறது.

Tags : Government School Students ,School Education Department , Government school students educational television Lesson: Broadcast schedule of School Education issued ... !!
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்