×

விதிகளை பின்பற்றியே கட்டணம் நிர்ணயம்; மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!!

சென்னை: ஊரடங்கு காலத்தில் மின் கட்டண முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மின் வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று மின் கணக்கீடு பணியை மேற்கொள்ள வில்லை. இதனால் கடந்த 4 மாதங்களாக பணியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டணத்தை, பிப்ரவரியில் செலுத்திய அதே கட்டணத்தை செலுத்துமாறு மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும், மின் கணக்கீடு செய்த பிறகு ஏதேனும் வேறுபாடு இருந்தால் அதில் கழித்து கொள்ளலாம் அல்லது கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் மின் வாரியம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அனைத்து நுகர்வோரும் மின் கட்டணத்தை செலுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது, மார்ச். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 4 மாதங்களுக்கும் மொத்தமாக கணக்கீடு செய்து மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்துதான் தற்போது, சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

அதாவது இந்த மின் கணக்கீடு என்பது தவறு, இதனால் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அவர் தனது மனுவில் கூறியுள்ளார். மேலும், 4 மாதத்திற்கு மொத்தமாக கட்டணம் வசூல் செய்யப்பட்டால் கட்டண விகிதம் பலமடங்காக அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விதிகளை பின்பற்றியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என தமிழக அரசின் வாதத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Chennai High Court , Determination of fees following the rules; Chennai High Court dismisses case against electricity tariff .. !!!
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...