தூத்துக்குடியில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை எதிர்த்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!!

தூத்துக்குடி:  தூத்துக்குடி ஊரக உள்ளாட்சி அலுவலகத்தில் சக பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பாலியல் தொல்லை என்பது அதிகளவு நடந்து வருகிறது. இதனால் பல சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், அவற்றில் பலரும் சம்பவத்தின்போதே இறந்து விடுகின்றனர். இந்த அவல நிலை மேலும் பல இடங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஊரக உள்ளாட்சி அலுவலகத்தில் உதவி இயக்குனர் உமா சங்கர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாகவே, அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழிய பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அந்த பெண் மிகவும் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து சித்திரவதை செய்ததால் அந்த பெண், பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அரசு அதிகாரிகள் கடந்த ஒரு வார காலமாகவே உதவி இயக்குனர் உமா சங்கர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை சங்கமும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகேந்திர பாபு தலைமை தாங்கினார். இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சி துறை அலுவலகத்தில் பணியாற்றும் உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: