எங்க கட்சியில் சேர விரும்பினால் விரிந்த கைகளுடன் வரவேற்போம்: பாஜகவில் இணைய சச்சின் பைலட்டுக்கு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் அழைப்பு...!!!

ஜெய்ப்பூர்: பதவி பறிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டை பாரதிய ஜனதா கட்சி வரவேற்கும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் சூசகமாக தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இரண்டு பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் சச்சின் பைலட் பாஜகவில் இணைவார் என்று பேசப்பட்டது. மேலும், அவர் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை பார்க்க போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் இதை சச்சின் பைலட் தரப்பு கடைசியில் மறுத்தது. பாஜகவில் சேரும் எண்ணத்தில் சச்சின் பைலட் இல்லை என்று கூறப்பட்டது. அவர் காங்கிரசில்தான் இருப்பார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷெகாவத், எங்க கட்சியில் சேர விரும்பினாலும் விரிந்த கைகளுடன் வரவேற்போம் என்று சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். கட்சியை தொடங்கிய பிறகு பல மக்கள் பா.ஜ.க.வில் இணைந்ததால் உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. எங்களது சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், எங்களது கட்சியில் சேர விரும்பவர்களை நாங்கள் நிச்சயமாக விரிந்த கைகளுடன் வரவேற்போம் என தெரிவித்தார்.

 பலமான அரசியல் அடித்தளம் கொண்ட எந்த கட்சி தலைவரும் பாரதிய ஜனதாவிற்குள் வர விரும்பினால் அவர்  கண்டிப்பாக வரவேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் களேபரத்திற்கு பாரதிய ஜனதா தான் காரணம் என்ற காங்கிரசின் குற்றச்சாட்டை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டால் கோவில் பூசாரியை திட்டி தீர்ப்பது எளிது தான் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார். ஒரு திரைப்படம் சரியாக ஓடாது என்பதை தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், நடிகை உள்ளிட்டோர் அறிந்தால் அவர்கள் அனைவரும் சேர்ந்து முன்னெடுப்பு பிரட்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ள அமைச்சர் ஷெகாவத், இதுதான் ராஜஸ்தான் காங்கிரசிலும் நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: