×

கடைகளுக்கு வந்து ஷாப்பிங் செய்ய மக்கள் தயக்கம் கொரோனாவால் அதிகரிக்கும் ஆன்லைன் ஷாப்பிங்

* சிறுகடைகளும் டிஜிட்டலுக்கு மாற திட்டம்
* தீவிர நோய் பரவல் ஏற்படுத்தியது மாற்றம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக மளிகை பொருட்கள் முதல் அனைத்தும் ஆன்லைனில் வாங்குவது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், அத்தியாவசிய கடைகள் நிறுவனங்கள் தவிர எதுவும் இயங்கவில்லை. அதோடு வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்கள் வெளியில் வந்தால் நோய் தொற்றுக்கு ஆளாகி விடுவோமோ என்று அச்சத்துடன் உள்ளனர். சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் கடைகளில் கூட்டமாக குவிந்த பிறகு நோய் பரவல் வெகு வேகமாக அதிகரித்துள்ளது. எனவே மக்கள் பலர் இந்த அச்சத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.

வழக்கமாக எலக்ட்ரானிக் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விலை குறைவு தள்ளுபடி போன்ற காரணங்களால் இதற்கு ஒரு தரப்பினர் எப்போதும் வரவேற்பு உண்டு. கொரோனா பரவலுக்கு பிறகு, மக்கள் வெளியில் வர அஞ்சுவதால் ஆன்லைன் வர்த்தகம் சூடுபிடித்துள்ளது. பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய மளிகை கடைகளும் கூட ஆன் லைன் விற்பனைக்கு மாறிவரும் அதிசயத்தை இந்த நோய் பரவல் ஓரளவு சாத்தியமாகி உள்ளது என்றே கூறலாம். தனியார் அமைப்பு ஒன்றின் ஆய்வின்படி நாடு முழுவதும் சுமார் 1.3 கோடிக்கும் மேற்பட்ட மளிகை கடைகள் உள்ளிட்ட சிறிய கடைகள் உள்ளன.  

இவர்களில் ஆன்லைன் மூலம் பொருட்களை டெலிவரி செய்பவர்கள் 0.5 சதவீதத்துக்கும் குறைவு தான். டிஜிட்டலுக்கு மாறியவர்கள் சுமார் 35 லட்சத்திற்கும் குறைவுதான் நோய் பரவல் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வரும் நிலையில், சில மளிகை கடைகள் கூட ஆன்லைன் ஷாப்பிங் இருக்கும் மாறியுள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு சில்லறை விற்பனை கடைகளில் 7 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்த  டிஜிட்டல் பரிவர்த்தனை தற்போது 45 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இவை அனைத்துமே மொபைல் மூலமான பரிவர்த்தனை தான்.

இவ்வாறு கொரோனா பரவல் மக்களிடையே மட்டுமின்றி சிறு கடை வியாபாரிகளிடம் கூட மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் சூப்பர் மார்க்கெட் நடத்தும் நிறுவனத்தினர் சிலர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இது அளவு நீடித்தால் இந்த ஆண்டில் மளிகை பொருட்கள் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகம் ரூ.22,500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்திய ஆண்டைவிட 76 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது என்றனர்.

* கடைகளை இழுக்க போட்டி போடும் ‘ஸ்டார்ட் அப்’கள்
அருகில் ஒரு சில கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் வாடிக்கையாளர்களை மட்டுமே நம்பியுள்ள சிறிய கடைகளை ஆன்லைன் பக்கம் இழுக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல தீவிரம் காட்டுகின்றன. நோய் பரவலுக்கு முன் இருந்ததைவிட இந்த நிறுவனங்களில் ஆப்ஸ்களை பயன்படுத்தி ஆன்லைன் ஆர்டருக்கு சிறிய கடைகள் சில கூட மாறியிருப்பதாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

* வேலைக்கு ஆட்கள் தேர்வு அதிகரிப்பு
ஆன்லைன் நிறுவனங்களில் கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் 120 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் விற்பனை என்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக ஏப்ரல் மட்டும் வர்த்தகம் குறைந்தது. தற்போது மீண்டும் அதிகரித்து ள்ளது. இதனால் பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் பொருட்கள் டெலிவரிக்காக 7000 பேர் முதல் 12 ஆயிரம் பேர் வரை புதிதாக ஆட்களை தேர்வு செய்துள்ளனர். அமேசான் 50 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

* போன் செய்தால் போதும் வீடு தேடி பொருள் வரும்
ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மாறாத சிறிய கடைகள் கூட ஊரடங்கு காலத்தில் போன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு வீடு தேடி பொருட்களை சப்ளை செய்கின்றன. இவ்வாறு போனில் ஆர்டர் செய்து வாங்குவது அதிகரித்துள்ளதாக சில கடைக்காரர்கள் கூறுகின்றனர். மேலும், பொருட்களை சப்ளை செய்துவிட்டு டிஜிட்டல் முறையில் பணத்தை பெற்றுக் கொள்வது, கணக்கு எழுதி வைத்துக் கொண்டு பிறகு பணத்தை வாங்கிக் கொள்வது ஆகியவை அதிகரித்துள்ளது சில கடைக்காரர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

* கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வது அதிகரித்து வருகிறது.
* சிறிய கடைகள் கூட ஆன்லைன் ஷாப்பிங் இருக்கும் நிலைக்கு மாறிவிடுகின்றன.
* நாடு முழுவதும் சிறிய கடைகளில் எண்ணிக்கை சுமார் 1.3 கோடிக்கும் மேல். இவற்றில் ஆன்லைனில் இணைந்தவை 0.5 சதவீதத்துக்கும் குறைவு.‌
* இவற்றில் 10 சதவீதத்துக்கும் குறைவானவை ஏற்கெனவே ஆன்லைனில் இணைந்துள்ளன.
* கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டில் மட்டும் மளிகை பொருட்கள் உள்பட ஆன்லைன் ஷாப்பிங் ரூ.22,500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டைவிட 76 சதவீதம் அதிகம்.

Tags : Corona ,shops ,shop , Shop, shopping, people reluctant, corona, increase, online shopping
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி