×

சில்லி பாய்ன்ட்...

* கொரோனா தொற்று பீதி காரணமாக பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி உட்பட தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையில் நடைபெற இருந்த பிபா உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்கள் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.
* ஆஸி. கிரிக்கெட் வீரர்களுக்கு மனநலம் மற்றும் நல்வாழ்வு ஆலோசகரை நியமிக்க உள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
* டெல்லியில் உள்ள சத்ராசல் ஸ்டேடியத்தில் ரவி தாஹியா, தீபக் பூனியா உட்பட மல்யுத்த நட்சத்திரங்கள் பலரும் நேற்று பயிற்சியை தொடங்கினர்.
* மான்செஸ்டர் சிட்டி கிளப்புக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடை நீக்கப்பட்டுள்ளது கால்பந்து விளையாட்டுக்கு நல்லதல்ல என்று லிவர்பூல் அணி பயிற்சியாளர் ஜர்கன் கிளாப் கருத்து தெரிவித்துள்ளார்.
* ‘எனது பெயர் மற்றும் மதம் காரணமாகவே ஹாக்கி இந்தியா தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்’ என்று முஷ்டாக் அகமது குற்றம்சாட்டி உள்ளார்.
* 17 மாநிலங்களை சேர்ந்த இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர்.
* ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில், கிரனடா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

Tags : Roulette, point
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...