×

கூடுதல் கமிஷனர் அனுமதியின்றி போக்குவரத்து போலீசார் அயல் பணி செல்ல தடை

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையில் 3,500க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் உதவி ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை பலர் அயல் பணியாக வேறு போக்குவரத்து காவல் நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர், பல ஆண்டுகளாக அயல் பணியிலேயே பணிபுரிந்து வருவது  தற்போது தெரிய வந்துள்ளது. இது தவறான நடைமுறை என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், இனி வரும் காவலங்களில் அயல் பணிக்கு செல்பவர்கள் எனது ஆணை கட்டாயம் பெற வேண்டும் என்று அனைத்து போக்குவரத்து துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்களுக்கு சுற்றறிற்கை அனுப்பி உள்ளார். அதில், போக்குவரத்து காவல் துறையில் இருந்து துணை கமிஷனர்கள் யாரும் இனி அயல் பணிக்கு மாற்றம் செய்யமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Commissioner ,overseas , Additional Commissioner, without permission, traffic police, foreign work, prohibition
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...