கந்த சஷ்டி கவசம் ஆபாசமாக சித்தரிப்பு பாஜவினர் நாளை வீடுகள் முன் ஆர்ப்பாட்டம்: எல்.முருகன் அறிவிப்பு

சென்னை: பாஜ மாநில தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்து மத சடங்குகளை கேலி செய்து சுரேந்திர நடராஜன் என்பவர்  வீடியோ பதிவுகளாக ‘கருப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டு வருகிறார். ஆபாச புராணம், கந்த சஷ்டி12, என்ற தலைப்புகளில் இவர் பல்வேறு பதிவுகளை வெளியிட்டுள்ளார். முருக பக்தர்களை அவமானப்படுத்தும் நோக்கில் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். சுரேந்திர நடராஜன் போன்றவர்களை கண்டித்தும், இவரை தேசத் துரோக வழக்கு மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், பாஜக நிர்வாகிகள் அனைவரும், அவரவர் வீடுகளுக்கு முன்பாக நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அறவழி கண்டனப்போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நானும் எனது வீட்டின் முன்பாக நடக்கும் அறவழி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: