காணொலி காட்சி வாயிலாக மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும்: சென்னை கலெக்டருக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்

சென்னை: மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக நடத்திட மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சென்னை மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமிக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், 9 ஜூலை 2020 தேதியிட்ட தகவல் தொடர்புகளில், மாவட்ட அளவிலான மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (திஷா) குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் கோவிட் 19 பரவல் தொடர்பாக வழங்கப்பட்ட ஆலோசனைகளின்படி, இந்த காலாண்டிற்கான திஷா குழு கூட்டத்தை காணொலி காட்சி வாயிலாக நடத்தலாம் எனவும், அதற்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள என்.ஐ.சி உதவியுடன் ஒருங்கிணைந்து நடத்திக்கொள்ளலாம் எனவும் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஆகவே, மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (திஷா) தலைவர் என்கிற முறையில் ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இக்குழுவின் காலாண்டு கூட்டத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் காணொலிக்காட்சி மாநாட்டில் (வீடியோ கான்பரன்சிங்) பங்கேற்பதற்கு வசதியாக திஷா டாஷ்போர்டு மற்றும் திஷா சந்திப்பு மேலாண்மை மென்பொருள் ஆகியவற்றை அவர்களுக்கு அமைத்து தர உதவுவதற்காக உள்ளூர் என்.ஐ.சி பிரிவை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: