×

தமிழகத்தில் 31ம்தேதி வரை சிறப்பு ரயில் ரத்து

சென்னை: தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவையை ஜூலை 31ம் வரை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு ஒரு சில இடங்களுக்குள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்தது. இதன்படி திருச்சி - செங்கல்பட்டு, மதுரை - விழுப்புரம், அரக்கோணம் - கோவை, கோவை - மயிலாடுதுறை, திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி உள்ளிட்டட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால் ஜூலை 15 வரை சிறப்பு ரயில் இயக்கத்தை ரத்து செய்து  தெற்கு ரயில்வே உத்தரவிட்டது. இந்நிலையில் சிறப்பு ரயில் ரத்து ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி வரும் ஜூலை 30ம் தேதி வரை தமிழகத்தில் எந்தவித சிறப்பு ரயிலும் இயங்காது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, special train till 31st, canceled
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...