அச்சிறுப்பாக்கம் அருகே சாராயம் விற்ற மூவர் கைது: 100 லிட்டர் பறிமுதல்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே கள்ளச்சாராயம் விற்ற, 3 பேரை போலீசார் கைது செய்தனர். அச்சிறுப்பாக்கம் அடுத்த ஒரத்தி அருகே கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவர் நேற்று இரவு ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, ஒரத்தி அருகே உள்ள கரசங்கால் ஆற்றில், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 கேன்களில் எரிசாராயம் விற்கப்படுவது தெரியவந்தது.

இதேபோன்று, கரசங்கால் ரயில் நிலையம் அருகே கள்ளச்சாராயம் விற்கப்படுவது தெரியவந்தது. இதனடிப்படையில், கரசங்கால் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் (28), திண்டிவனம் தாலுகா மேல்பட்டு கிராமத்தை சேர்ந்த மாரி என்கிற நண்டு மாரி (55), மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்கிற வேல்முருகன் (36), ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து, சுமார் 100 லிட்டர் எரிசாராயம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து ஒரத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: