×

மதுராந்தகம் நகராட்சியில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சியில், நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 26 பேருக்கு கொரோனா தொற்று முடிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் இதுவரை 181 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும், நகராட்சியில், வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியாக மதுராந்தகம் நகரின் முக்கிய வீதிகளான தேரடி சாலை, மருத்துவமனை சாலை, வடராயன் தெரு, தென்ராயன் தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்கள் யாரும் செல்ல முடியாதபடி அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக மதுராந்தகம் நகராட்சியில் 26 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும், ஒரு பகுதியில் மூன்று பேருக்கு கொரோனா உள்ளதால், அந்த தெரு முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் நகராட்சி கமிஷனர் நாராயணன் கூறுகையில், ‘கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பகுதியில் கிருமி நாசினிகள் தெளித்து வருகிறோம். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் நகராட்சி, ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்’ என்றார்.

Tags : municipality ,Madurantakam ,Corona , Madurantakam Municipality, 26 people, corona infection
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை