விடுபட்ட ஊராட்சிகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்ககோரி ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் மனு: கலெக்டரிடம் வழங்கினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், தலைவர் உஷா பிரேம்சேகர், செயலாளர் சுமிதாசுந்தர், பொருளாளர் மணி ஆகியோர் தலைமையில் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கொடுத்த மனுவின் விவரம்: திருவள்ளூர் ஒன்றிய ஊராட்சிகளுக்கு, 14வது நிதிக்குழுவின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இதற்கான பணி தேர்வு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் பெறுவதற்கான நடைமுறைகள் ஊராட்சிகளிடம் இருந்துவந்தது.

தற்சமயம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதாக தெரியவருகிறது. இவை ஊராட்சிகளின் அதிகாரத்தைப் பறிப்பதாக அமையும். எனவே பழைய நடைமுறைப்படி ஊராட்சிகள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் முறையை அமல்படுத்த வேண்டும். 15ம் நிதிக்குழு மானியம் ஜல் ஜீவன் மிஷன், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் ஒதுக்கப்படுகின்ற நிதிக்கும், பணிகள் தேர்வு செய்யவும் ஒப்பந்தங்களும் ஊராட்சிகளுக்கு அதிகாரம் வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: