×

மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலி: தாராபுரம் அருகே விவசாயிகள் பீதி

தாராபுரம்: தாராபுரத்தில் விவசாய தோட்டத்தில் மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலியாகின. இதனால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்பாறுணை தொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொம்மநாயக்கன் தோட்டம் பூவேந்திரன். இவரது மனைவி ஜெயபாரதி. இவரது தோட்டத்தில் உள்ள பட்டியில் 20 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வளர்ப்பு ஆடுகளை பட்டியில் அடைத்து ஆடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு தூங்க சென்றுள்ளார். இரவில், திடீரென ஆடுகள் கத்திய சத்தம் கேட்டு, வெளியே வந்து பார்த்தபோது, பட்டியில் இருந்து ஒரு மர்ம விலங்கு தப்பி குதித்து ஓடியது. ஆனால், அது என்ன விலங்கு? என்பது இருட்டில் சரிவர தெரியவில்லை.

பட்டிக்கு சென்று பார்த்தபோது 9 ஆடுகள் கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்தன. மேலும் 1 ஆடு உயிருக்கு போராடி கொண்டிருந்து. இதனால் அதிர்ச்சியடைந்த பூவேந்திரன் கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் பூவேந்திரன் வீட்டின் முன்பு திரண்டு ஆடுகளைக் கொன்ற மர்ம விலங்கை நள்ளிரவு வரை தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இது குறித்து தகவலறிந்த தொப்பம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாராபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆடுகளை பார்வையிட்டனர். தொடர்ந்து கால்நடை துறை மருத்துவர் வரவழைக்கப்பட்டு, இறந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர்.


Tags : Tarapuram , Mysterious animal, killing goats, Tarapuram
× RELATED தாராபுரம் அருகே டிப்பர் லாரி மோதி...