×

பாபநாசம் அருகே காவிரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்: துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி

பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கபிஸ்தலம். வழியில் குட முருட்டி, திருமலை ராஜன் ஆறு, அரசலாறு, காவிரி உள்ளிட்ட 4 பாலங்கள் உள்ளது. இந்நிலையில் காவிரி ஆறு பாலத்தில் காவிரிக் கரையில் இறைச்சி கழிவு உள்ளிட்ட குப்பைகள் கொட்டப் படுவதால் சாலையில் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள் மூக்கைப் பொத்தியப்படி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலைக்கு செல்பவர்கள் இந்தப் பாலத்தை கடந்துத் தான் செல்ல வேண்டும். இதேப் போன்று திருவையாறு, கபிஸ்தலம், மேல கபிஸ்தலம், உம்பளாப்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு இந்தப் பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்தப் பாலத்தின் அருகில் கடைகள், குடியிருப்புகள் உள்ளன. இங்கு கொட்டப் படும் இறைச்சி கழிவுகள், குப்பைகளால் தொற்று வியாதிகள் பரவும் அபாயம் உள்ளது. காவிரி பாலத்தின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் மது குடித்து மதுபாட்டில்களை இங்கு வீசிச்செல்வதால் காவிரி மாசுபடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு காவிரி ஆற்றின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Motorists ,Papanasam ,Cauvery , Papanasam, meat waste
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...