தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..!!

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் கல்வி நிகழ்ச்சி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டத்தினையும் தொடங்கி வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் பல கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தொற்று குறைந்த இடங்களில் தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.

ஆனால், பள்ளிகளை மீண்டும் திறக்க ஏதுவான சூழல் இன்னும் உருவாகவில்லை என்று அரசு அறிவித்திருந்தது. இதனிடையே ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி கற்க அரசு திட்டம் வகுத்தது.

ஆனால், அதற்கு பல்வேறு தரப்பினர் இடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆன்லைன் கல்வி ஏழை மாணவர்களுக்கு முடியாத விஷயமாக பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதே நேரம் மாணவர்கள் கண்களுக்கு பாதிப்பு உண்டாகும் என்று பலரும் தெரிவித்தனர். இந்நிலையில் அனைத்து தரப்பு மாணவர்களும் பயன் அடையும் வகையில் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பள்ளிப் பாடம் கற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், பொதுத் தேர்வுகள், கல்வி உதவித் தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும், கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார்கள்.

இந்த கல்வி தொலைக்காட்சியில், எல்.கே.ஜி. முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், படைப்பாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் நிபுணர்களின் பதில்கள், பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்புகள், புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல்  என  பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மேலும் கல்வி, கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்கள் குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

Related Stories: