×

பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி 'கோவாக்சின்'பரிசோதனை தொடக்கம் : 10 தன்னார்வலர்களுக்கு 2 முறை செலுத்தி சோதிக்க திட்டம்!!

பாட்னா : பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது.உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் கடந்த சில மாதங்களாகவே குறையாத நிலையில், தற்பொழுது இதற்கான தீர்வாக பல மருத்துவமனை ஆய்வுக்கூடங்களில் மருந்துகள், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், புனேவில் உள்ள மத்திய அரசின் தேசிய தொற்றுநோய் ஆய்வு நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பையோடெக் நிறுவனங்களுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்துள்ள கோவேக்சின் என்ற தடுப்பூசி, விலங்குகளுக்கு செலுத்தப்பட்டுவெற்றிகரமாகபரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தமிழகத்தின் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி உட்பட நாடு முழுவதும் சுமார் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றான பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், அந்த மருத்துவமனையில் நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்ட 10 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்கும் பணி தொடங்கியுள்ளது.  இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு 14 நாட்களுக்கு 2வது முறையாக மீண்டும் செலுத்தி பரிசோதிக்கப்படும். தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். இதற்காக தனியாக ஒரு மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு ஏதாவது பாதிப்புகள், பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதும் ஆய்வு செய்யப்பட உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.     


Tags : volunteers ,hospital ,Patna AIIMS ,Corona ,Patna Aims Hospital ,trial , Patna, AIIMS, hospital, corona, vaccine, covaxin, test
× RELATED 221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு