சீனாவுடன் 25 ஆண்டுகால பெரிய டீல்.. சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்கியது ஈரான்; இந்தியாவுக்கு பெரிய இழப்பு என காங்கிரஸ் விமர்சனம்!!

டெஹ்ரான்: ஈரான் சாபஹார் துறைமுக ரயில்வே திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை நீக்க ஈரான் முடிவு செய்துள்ளது. ஈரானில் இருக்கும் சாபஹார் துறை முகத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருக்கும் ஷாஹேடன் பகுதிக்கு இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆப்கானிஸ்தான் உடன் ஈரானை ரயில் மூலமாக இணைக்க இந்த திட்டம் வழியாக அமையும் என்று கூறப்பட்டது. இந்த ரயில்வே திட்டத்திற்கான ஒப்பந்தம் இந்திய ரயில்வே, ஈரானியன் ரயில்வே மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த 2016ல் போடப்பட்டது.

இந்நிலையில் திட்டத்தைத் தொடங்க இந்திய தரப்பிலிருந்து நிதி அளிப்பதில் தாமதமாகி வருவதால் தாங்களே இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்கிறோம் என்று ஈரான் இந்தியாவை இத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது.

இந்தியா பணிகள் எதையும் செய்யவில்லை என்று கூறி ஈரான் கூறி இந்த முடிவை எடுத்துள்ளது.

இது ஏன் இப்படி இந்தியாவை கழற்றி விட நேரிட்டது என்றால் சீனா, ஈரானுடன் மிகப்பெரிய அளவில் 25 ஆண்டுகால 400 பில்லியன் டாலர் ராணுவ-பொருளாதார கூட்டுறவு மேற்கொள்வதை இறுதி செய்ததுதான் என்று கூறப்படுகிறது. அதன்படி சீனா இந்த திட்டம் மூலம் ஈரானில் பல்வேறு சாலை பணிகள், ரயில்வே பணிகள், மற்றும் துறைமுக பணிகளை செய்ய உள்ளது. சாபஹார் துறைமுக பணிகளையும் இந்த திட்டம் மூலம் சீனா செய்ய இருக்கிறது. அங்கே எண்ணெய் எடுக்கும் பணிகளையும் சீனா செய்ய உள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்:

சாபஹார் துறைமுக ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை ஈரான் கழற்றிவிட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தன் ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவை சாபஹார் துறைமுகத்திட்டத்திலிருந்து ஈரான் கழற்றி விட்டுள்ளது. இது இந்தியாவுக்கு பெரிய நஷ்டம்” என்று சாடியுள்ளார்.

Related Stories: