×

உலக பணக்காரர்கள் பட்டியலில் 6ம் இடத்திற்கு முன்னேறினார் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி!!

மும்பை: கடனே இல்லாத இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி, இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் 6ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ல்பபெட் (Alphabet) நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜினை ஏழாம் இடத்திற்கு தள்ளி விட்டு, முகேஷ் அம்பானி ஆறாம் இடத்தை பிடித்துள்ளார்.

*கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்து வருகிறது.

*கடந்த மே மாத தொடக்கத்தில்தான் மொத்தமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை ஈர்த்ததுதான் இதற்கு காரணம் ஆகும்.

*இந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானி உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். 65 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அவர் டாப் 10 இடத்திற்குள் வந்தார்.  

*பின்னர் கடந்த வாரம் முகேஷ் அம்பானி உலகின் பணக்காரர் வாரன் பஃப்பெட்டை முந்தி உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

*இந்த நிலையில் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் தற்போது எலோன் மஸ்க் மற்றும் கூகுள் நிறுவனர் லாரி பேஜை இந்தியாவின் முகேஷ் அம்பானி முந்தி இருக்கிறார்.

*இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 6வது இடத்தை பிடித்து இருக்கிறார். முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு 72.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அவரின் சொத்து மதிப்பில் 2.17 பில்லியன் டாலர் உயர்ந்த நிலையில் அவர் 6ம் இடத்தை பிடுத்துள்ளார்.

Tags : Mukesh Ambani ,Reliance Industries ,world , World Richest, List, 6th Rank, Reliance, Industries, Company, Chairman, Mukesh Ambani
× RELATED அம்பானி இல்ல திருமண விழாவில் திருட முயன்ற திருச்சி கும்பல் கைது