×

சொல்லிட்டாங்க...

* கொரோனாவை தமிழகத்தில் ஒழித்திடவும், பொருளாதார பின்னடைவிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவும் பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனை மிகவும் ஆக்கப்பூர்வமானவை. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* ஓர் அரசியல் கட்சியின் நோக்கம் மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவதும், அந்த பிரச்னைகளை தீர்த்து வைப்பதும்தான். - பாமக நிறுவனர் ராமதாஸ்

* காமராஜரின் ஆட்சியை இன்றைய ஆட்சியோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, நெஞ்சு பொறுக்க முடியாமல் வேதனையில் விம்முகிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* மின்சார சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் போன்றவற்றை மத்திய அரசு அவசர கோலத்தில் நிறைவேற்றி வருகிறது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Tags : Told
× RELATED சொல்லிட்டாங்க...