கவிஞர் வைரமுத்து பிறந்த நாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கவிப்பேரரசு வைரமுத்துவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்குத் தொலைபேசி வாயிலாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அகவை 66. அவரது கவித்தமிழுக்கு என்றும் வயது 16. தமிழ் அன்னைக்குக் கிடைத்த அணிகலன்களில் வைரமும் முத்தும் சேர்த்தவர். முத்தமிழறிஞர் கலைஞரின் அன்புக்கு பாத்திரமானவர். ஆயிரமாண்டு வாழும் படைப்புகளைப் படைத்து நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன். = இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: