×

நல்ல நிலையில எங்க இருக்கு? ராகுல் கேள்வி

புதுடெல்லி: கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் அவர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் நடந்த விழா ஒன்றில் பேசியபோது, ‘கொரோனாவை  எதிர்த்து போராடுவதில், இந்தியா உலகளவில் நல்ல நிலையில் இருக்கிறது,’ என்றார். இதை ராகுல் நேற்று விமர்சித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்தியாவில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதை காட்டும் வரைப்படத்தையும், தென்கொரியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பாதிப்பு அளவு படிப்படியாக குறைந்து வருவதை காட்டும் வரைப்படத்தையும் ஆதாரமாக வெளியிட்டு, ‘கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலையில்தான் இருக்கிறதா?’ என்று கேள்வி கேட்டுள்ளார்.

Tags : Good condition, where are you ?, Rahul asked
× RELATED 100சதவீத கட்டணம் கேட்கும் பள்ளிகள் எவை? மெட்ரிக் இயக்ககம் கேள்வி