×

கொரோனாவுக்கு துணை முதல்வர், குடும்பம் பாதிப்பு

திருமலை: ஆந்திர மாநில துணை முதல்வரும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருமானவர் அம்ஜத் பாஷா. இவருக்கு கடப்பாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கொரோனோ தொற்று உறுதியானது. இதையடுத்து, அவரது மனைவி மற்றும் மகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கும் தொற்று இருப்பது 2 தினங்களுக்கு முன் உறுதியானது. அவர்கள் திருப்பதி சுவிம்ஸ் கோவிட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து ஐதராபாத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Deputy Chief ,Corona , Corona, Deputy Chief, Family, vulnerability
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள்...