×

சென்னையில் 76% பேர் குணமடைந்தனர்

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 73 ஆயிரம் பேரில் 76 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்றுவருபவர்கள், குணமடைந்தவர்கள் தொடர்பான அறிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி சென்னையில் மட்டும் 77, 338 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 58,615 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 76 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 17 ஆயிரத்து 469 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

சென்னையில் மொத்தம் 1,253 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், கோடம்பாக்கம், திருவிகநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர். இதற்கிடையில் சென்னையில் நடைபெற்ற காய்ச்சல் மூலம் 10 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த மே 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை 1.61 லட்சம் காய்ச்சல் முகாம் நடைபெற்றுள்ளது. இதில் 10 லட்சம் பேர் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் 50 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு 46 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai , Chennai, 76%, recovered
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...