கலெக்டர் அலுவலகம் திறப்பு

திருவள்ளூர்: தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தலைமை செயலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் கிருமிநாசினி தெளித்து மூட அரசு அறிவுறுத்தி இருந்தது.அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதும், அனைத்து துறை அலுவலகத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டது. பின்னர், நேற்று காலை தூய்மைப் பணியாளர்கள் மூலம் அலுவலகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டதால், கலெக்டர் அலுவலகம் திறக்கப்படவில்லை. இதனால், ஊழியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அலுவலகம் திறக்கப்பட்டது.

Related Stories: