செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது: ஒரேநாளில் 7 மரணம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியதுடன் ஒரே நாளில் 7 பேர் மரணமடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 219 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 8,283 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 4,528 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் கொரோனா தொற்றால் 7 பேர் இறந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 165 பேர் நோய்தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

Related Stories: