உத்திரமேரூரில் ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர்: மும்பை தாதர் பகுதியில் அமைந்துள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்த ராஜ்கிரஹா என்ற அவரது இல்லத்தை அண்மையில் சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தி வீட்டை சேதப்படுத்தி சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்துள்ளனர். இதனால் டாக்டர் அம்பேத்கர் இல்லத்திற்கு பாதுகாப்பு வழங்காத மத்திய அரசை கண்டித்து உத்திரமேரூர் அம்பேத்கர் சிலை அருகே காஞ்சி மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் காஞ்சி மாவட்டத் தலைவர் காஞ்சி என்.சம்பத் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் நகர தலைவர் மாணிக்கம், ஒன்றிய பொறுப்பாளர் மலையாங்குளம் குட்டி, கருணா, மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அப்பேத்கர் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்காத மத்திய அரசை கண்டத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: